Thursday, 16 March 2017

Wednesday, 22 February 2017

ஹைட்ரோகார்பனுக்கு எதிராக தஞ்சை நெடுவாசலில் ஆயிரக்கணக்கான  பொது மக்கள் இன்றும் போராட்டம்.

ஹைட்ரோகார்பனுக்கு எதிராக தஞ்சை நெடுவாசலில் ஆயிரக்கணக்கான  பொது மக்கள் இன்றும் போராட்டம்...

Hydraulic fracking தமிழகத்திற்குள் வந்து பல பத்தாண்டுகள் ஆகிவிட்டது. இனியும் அமைதியாகிருந்தால் நம்மூரிலேயே நாம் பிச்சைகாரர்களாகிவிடுவோம்.

Hydraulic fracking ! இது பற்றி அனைவருமே அறிந்துவைத்திருப்போம். 1980களில் மக்களிடம் தற்பொழுதைய அளவு  விழிப்புணர்வு இல்லாத காலம். திடீரென ஒரு நாள் ஒரு வாகனம் எங்களூருக்குள் வந்தது. அதில் பல அதிகாரிகள். ஏதேதோ கலந்து ஆலோசிக்கின்றனர். ஒரு சிலரின் விளைநிலங்களை சில மாதங்களுக்கு பிறகு எடுத்துக் கொள்கிறார்கள். உரிமையாளர்களுக்கு சொர்ப்ப பணம் தருகின்றனர். அடுத்த சில நாட்களில் சுமையுந்துகளில் கருங்கற்கள் , செம்மண் சரளைகள் குவிக்கப்பட்டன. கையகப்படுத்திய நிலங்களில் அவை நிறைக்கபட்டன. இராட்சத துளையிடும் இயந்திரங்கள் வந்தன. ஓரு சில மாதங்கள் தொடர்ந்து துளையிடுதல் நடக்கின்றது. அங்கே வேலை செய்வோர் அங்கேயே குளிர்பதன அறைகளுக்குள் தங்குகின்றனர். ஒரு நாள் திடீரென ஒரு குழாய் நடப்பட்டு அதன் மீது தீ எரிவிக்கபடுகிறது. காற்று , மழை, வெயில் எதிலும் அது அனைவதேயில்லை. பிறகு அங்கிருந்த யாரையும் காணவில்லை. எங்கே என தேடிய பொழுது, " வைப்பூர் பக்கம் போய்ட்டாங்க" என பதில் கிடைத்தது. ஒரு பத்தாண்டுகளில் , டெல்டா மாவட்டங்கள் மற்றும் கடலூர் மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் இதே போல பல இடங்கள் , விளைநிலங்கள்  காவு வாங்கப்பட்டன. கெயில் நிறுவனம் இயற்கை எரிவாயு எடுக்கின்றது என பிறகே தெரிய வருகிறது. இப்படி ஊருக்கு ஊர் இருக்கும் வாயு கிணறுகளை பலவற்றை குழாய்கள் மூலம் ஒன்றாக இணைக்கபட்டு, ஓர் இடத்தில் மீட்டரிங் பாய்ன்ட்கள் வைக்கப்பட்டன. அங்கே பல தொழிற்சாலைகள் திடுமென முளைத்தன.  விளை நிலங்கள் அடிமாட்டு விலைக்கு வாங்கப்பட்டன. விவசாய கூலிகளுக்கு அந்த தொழிற்சாலைகளில் எடுபிடி வேலைகள் தரப்பட்டன. நில உடைமையாளர்களுக்கு அந்த தனியார் நிறுவனங்கள் அவர்களின் நிலத்திற்கு மிக அதிக விலை தந்தனர். சில நிறுவனங்கள் ஓரிரு ஆண்டுகளில் காணாமல் போயின. நில உடைமைகாரனும் , அங்கே வேலை செய்தவனும் இப்பொழுது நடுத் தெருவில்! நாளாக நாளாக, குடி நீர் சுவை மாறுகிறது. ஏன் என கேட்க, பதில் சொல்ல அங்கே யாருமில்லை.

மேலே கடைசி சில வரிகளை நினைவில் கொள்க! பாசனத்திற்கு தண்ணீர் இல்லை என்றாலும், விவசாயம் ஒரு சில வருடங்கள் நடக்கவில்லை என்றாலும், நிலங்களின் சந்தை மதிப்பு வீழ்ந்துவிடும். அதை விற்று பிழைக்க வேண்டிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்படுவர். நாடெங்கிலும் நதிநீர் பங்கீடுகள் செவ்வனே சுமூக தீர்வு கண்டுகொண்டிருக்க, காவிரி நீர் பங்கீடு மட்டுமே தொடர்ந்து சர்ச்சைகளில் மாட்டி தவிக்கிறது. இப்பொழுது எங்கோ ஒரு தூரத்து வளையம் தென்படுகிறதா ! Hydraulic fracking தமிழகத்திற்குள் வந்து பல பத்தாண்டுகள் ஆகிவிட்டது. இனியும் அமைதியாகிருந்தால் நம்மூரிலேயே நாம் பிச்சைகாரர்களாகிவிடுவோம். இருப்பதையேனும் காத்திடுவோம். நாம் எதிர்க்க வேண்டியது மீத்தேன் நிறுவனங்களை மட்டுமல்ல. ONGC, GAIL, MECL ஆகியவற்றையும் சேர்த்துத்தான். ஒன்றினைவோம்.

Tuesday, 21 February 2017

இந்தியாவில் இருந்து பீட்டா அமைப்பை விரட்ட மாணவர்களின் சக்தி மீண்டும் கூடும் என சமூக வலைதளத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றது.

இந்தியாவில் இருந்து பீட்டா அமைப்பை விரட்ட மாணவர்களின் சக்தி மீண்டும் கூடும் என சமூக வலைதளத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றது.

பிப் 23, 2017

பீட்டா அமைப்பானது உலகில் உள்ள உயிரினங்கள் மீது அக்கரை கொள்வது போன்று அனைத்து உயிரினத்தையும் அழித்து வருகின்றது. அதன் வரிசையில் ஜல்லிக்கட்டு காளைகளும் பசுக்களும் அடைங்கியுள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் 50% நாட்டு மாடுகள் கடந்த 10 ஆண்டுகளில் பீட்டா மற்றும் அதன் கூட்டு அமைப்புகளுடன் சேர்ந்து அழிக்கப்பட்டு உள்ளது. மீதம் உள்ள உம்பளச்சேரி புலிகுளம் மற்றும் காங்கேயம் இன மாடுகள் ஜல்லிக்கட்டு இருப்பதனால் மட்டுமே பாதுகாத்து வந்தார்கள். ஜல்லிக்கட்டிற்க்கும் பீட்டா அமைப்பானது தடைவாங்கி இந்த வகை நாட்டு மாடுகளையும் அழிவிற்க்கு கொண்டு வந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் ஜல்லிக்கட்டு காளைகள் அதிகம் வெட்டுக்குச் சென்றது. ஆனால் 2017 ஜனவரி மாதம் தமிழக மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் தலையிட்டு தமிழகத்தில் மாபெரும் புரட்சியை கொண்டு வந்து ஜல்லிக்கட்டை மீண்டும் நடத்தி கொடுத்தார்கள். இது வரை ஜல்லிக்கட்டு சிறப்பாக அனைத்து இடங்களிலும் அரசின் கட்டுப்பாட்டுடன் நடைபெற்று வருகின்றது. ஆனால் நேற்று பீட்டாவின் இந்தியத் தலைவி பூர்வா ஜோர்பூறா அவர்களில் அறிக்கை மாணவர்கள் மத்தியில் பெரும் அதிர்ப்த்தியை ஏற்ப்படுத்தியது. இதன் விளைவாக மாணவர்களும் இளைஞர்களும் சமூக வலைதளங்களில் பீட்டாவை இந்தியாவில் இருந்து விரட்டுவது பற்றி அதிகமாக பேசிக்கொள்கிறார்கள் என்று ஒரு செய்தி வெளியானது. இனிநடக்கும் போராட்டங்களில் இந்தியாவில் உள்ள அனைத்து மாநில மாணவர்களுடன் சேர்ந்து போராடப்போவதாக மாணவர்கள் பேசிக்கொள்கிறார்கள். மேலும் கலச்சார விழாக்களில் தலையிடும் இது போன்ற அமைப்புகளுக்கு அனுமதி அளிக்கும் அரசுகளையும் மக்கள் எதிர்ப்பார்கள் என்று பேசப்பட்டு வருகின்றது. இனி மேல் ஜல்லிக்கட்டுக்கு தடை கேட்க்கும் அமைப்புகளுக்கு முதலில் தடை விதிக்குமாறு இந்திய அரசுக்கு மாணவ அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளது.

பாக்கெட் பால் விஷம் என்று தெரியுமா உங்களுக்கு? பாக்கெட் பாலில் என்ன இருக்கு என்று தெரியுமா உங்களுக்கு?

பாக்கெட் பால் விஷம் என்று தெரியுமா உங்களுக்கு

பாக்கெட் பாலில் என்ன இருக்கு என்று தெரியுமா
உங்களுக்கு

பால் திக்காக இருக்க

🔸ஸ்டார்ச்சு,
🔸மைதா மாவு,
🔸டிடர்ஜண்ட்,
🔸யூரியா,
🔸சர்க்கரை,
🔸குளுகோஸ்,
🔸பால் பவுடர் போன்றவை சேர்க்கப்படுகின்றது

பாலை அப்படி கெட்டியாகக் காட்டிக் கெடாமல் இருக்கக் கெட்டவழியில் பாதுகாப்பு செய்யப்படுகிறது

அதற்க்கு

🔻அமோனியா யூரியா,
🔻சோடியம் ஹைட்ராக்ûஸடு,
🔻கார்பன் ட்ரை ஆக்சைடு,
🔻பொட்டாசியம் ஹைட்ராக்சைடு சேர்க்கப்படுகின்றது

ஆதாரம்

http://chittarkottai.com/wp/2013/08/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D/

இது போல் பாக்கெட் பால் தொடர்ந்து குடிப்பதால்

🔹வயிற்றுப்போக்கு, 
🔹பிரசர்,
🔹சர்க்கரை நோய்,
🔹ஹார்மோன் சீர்கேடு,
🔹பாலியல் கோளாறுகள்,
🔹சிறு வயதிலே பருவமடைதல்
🔹ரத்த சோகை ஏற்படும். 🔹சிறுநீரகப் பாதிப்பு,  ஏற்படும் வாய்ப்பும் உண்டு.
என்று மருத்துவ ஆராய்ச்சி சொல்கின்றது

ஆதாரம்

https://www.youtube.com/watch?v=mRwjp3tMh6o

தண்ணீர் பால்தான் நல்லது என்று மருத்துவர்கள் கூறுகின்றார்கள். ஆதாரம் கிளிக் செய்து பாருங்கள்

http://www.vikatan.com/article_amp.php?aid=8437

பாக்கெட்பால் விஷம் என்று சன் டிவியில் கூறுகின்றார்கள் இந்த வீடியோ பாருங்கள்

https://www.youtube.com/watch?v=N_JcUjg2l-M

எனவே  முடிந்த அளவு பாக்கெட் பாலை தவிர்த்துக்கொள்ளுங்கள்

உங்கள் பகுதியில் பசும்பால் கிடைத்தால் வாங்கி உபயோகியுங்கள் , அதில் தண்ணீர் தான் கலப்பார்கள்  கெமிக்கல் கலக்கமாட்டார்கள்.

🏻சமூக மாற்றத்தை உங்களிடமிருந்து ஆரம்பியுங்கள்.

Monday, 20 February 2017

சேலம் மாவட்டம் கூடமலை ஜல்லிக்கட்டில் மாணவன் பலி! தந்தையை இழந்து வாழ்ந்து வந்த குடும்பத்தில் மீண்டும் ஒரு உயிர் பலி! உதவ யாரும் முன் வரததால் குடும்பம் பரிதாப நிலை!

சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டம் தம்மம்பட்டி அருகே கூடமலையில்  19/02/17 அன்று நடைபெற்ற சல்லிகட்டில் கந்தசாமிபுதூர் வடக்கு வீதியைச் சேர்ந்த செல்வராஜ் மகன் மணிகண்டன் (17) சல்லிகட்டில் காளை முட்டி காயமுற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவர் மல்லியகரை அரசினர் மேல்நிலைப் பள்ளியில் +2 EMI தொழில்கல்வி குரூப்பில் படித்து வருபவர்.

தந்தையை இழந்து வாழ்ந்து வந்த குடும்பத்தில் மீண்டும் ஒரு பலி. பரிதாபநிலையில் உள்ள குடும்பத்திற்க்கு யாராவது உதவ முன் வாருங்கள்.

S.மணிகண்டன்,
S/O, செல்வராஜ்,
மாரியம்மன் கோவில் அருகில்,
கந்தசாமி புதூர்-P.O. 
ஆத்தூர்-Tk,
சேலம்-DT.
மாணவனின் சித்தப்பா P.முருகேசன் - 9786828887, 
சாஜன், தம்மம்பட்டி- 9994186486

Saturday, 18 February 2017

பள்ளி மாறுவேட போட்டில் ஜல்லிக்கட்டு வீரனாக தோன்றிய சிறுவன்.

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பெரும் பங்கு ஆற்றிய விஜய்பாண்டியன் அவர்களின் மகன் வி. தேஜேஷ் பாண்டியன் அவர்கள் SBIOA பள்ளி மாறுவேட போட்டியில் மாடுபிடி வீரன் தோற்றத்தில் தோன்றி அசத்தினார். தம்பி அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிப்போம்.