இந்தியாவில் இருந்து பீட்டா அமைப்பை விரட்ட மாணவர்களின் சக்தி மீண்டும் கூடும் என சமூக வலைதளத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றது.
பிப் 23, 2017
பீட்டா அமைப்பானது உலகில் உள்ள உயிரினங்கள் மீது அக்கரை கொள்வது போன்று அனைத்து உயிரினத்தையும் அழித்து வருகின்றது. அதன் வரிசையில் ஜல்லிக்கட்டு காளைகளும் பசுக்களும் அடைங்கியுள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் 50% நாட்டு மாடுகள் கடந்த 10 ஆண்டுகளில் பீட்டா மற்றும் அதன் கூட்டு அமைப்புகளுடன் சேர்ந்து அழிக்கப்பட்டு உள்ளது. மீதம் உள்ள உம்பளச்சேரி புலிகுளம் மற்றும் காங்கேயம் இன மாடுகள் ஜல்லிக்கட்டு இருப்பதனால் மட்டுமே பாதுகாத்து வந்தார்கள். ஜல்லிக்கட்டிற்க்கும் பீட்டா அமைப்பானது தடைவாங்கி இந்த வகை நாட்டு மாடுகளையும் அழிவிற்க்கு கொண்டு வந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் ஜல்லிக்கட்டு காளைகள் அதிகம் வெட்டுக்குச் சென்றது. ஆனால் 2017 ஜனவரி மாதம் தமிழக மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் தலையிட்டு தமிழகத்தில் மாபெரும் புரட்சியை கொண்டு வந்து ஜல்லிக்கட்டை மீண்டும் நடத்தி கொடுத்தார்கள். இது வரை ஜல்லிக்கட்டு சிறப்பாக அனைத்து இடங்களிலும் அரசின் கட்டுப்பாட்டுடன் நடைபெற்று வருகின்றது. ஆனால் நேற்று பீட்டாவின் இந்தியத் தலைவி பூர்வா ஜோர்பூறா அவர்களில் அறிக்கை மாணவர்கள் மத்தியில் பெரும் அதிர்ப்த்தியை ஏற்ப்படுத்தியது. இதன் விளைவாக மாணவர்களும் இளைஞர்களும் சமூக வலைதளங்களில் பீட்டாவை இந்தியாவில் இருந்து விரட்டுவது பற்றி அதிகமாக பேசிக்கொள்கிறார்கள் என்று ஒரு செய்தி வெளியானது. இனிநடக்கும் போராட்டங்களில் இந்தியாவில் உள்ள அனைத்து மாநில மாணவர்களுடன் சேர்ந்து போராடப்போவதாக மாணவர்கள் பேசிக்கொள்கிறார்கள். மேலும் கலச்சார விழாக்களில் தலையிடும் இது போன்ற அமைப்புகளுக்கு அனுமதி அளிக்கும் அரசுகளையும் மக்கள் எதிர்ப்பார்கள் என்று பேசப்பட்டு வருகின்றது. இனி மேல் ஜல்லிக்கட்டுக்கு தடை கேட்க்கும் அமைப்புகளுக்கு முதலில் தடை விதிக்குமாறு இந்திய அரசுக்கு மாணவ அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளது.
No comments:
Post a Comment