Saturday, 31 December 2016

ஜல்லிக்கட்டை பற்றி ஏராளம் செய்வோர்களுக்கு!

கருவுற்று பெற்ற அன்னை ஒருத்தி, மற்றொரு அன்னையோ தன் பிள்ளைக்கும் இணையாக வளர்க்க,வரம் வாங்கி வந்தேன் என்ற பூரிப்பில் துள்ளித் திரிந்தேன், பன்னாட்டு நிறுவனம் எனும் கொடிய கயிர் கழுத்தில் விழும் வரை..

மிருகவதை, சட்டம் ஒழுங்கு என்ற பெயரில் என்னையும் என் தாய் நாட்டையும், அழிக்க நினைக்கும் நீயா என்மீது அக்கறை காட்டுகிறாய்? வேடிக்கையாய் இருக்கிறது…

ஏர் தழுவதல் என்ற வார்தைக்கு அர்த்தம் தெரியாத நீ யார்?
என் நண்பர்கள் என்னை ஏறித் தழுவுவதைப் பற்றி விமர்சனம் செய்ய, தெய்வமாய் வழிபடும் என்னையா துன்புறுத்துகிறார்கள்?
வேதனையாய் இருக்கிறது...

என் தாய்நாட்டு மண்ணை தரிசாக்கினாய், விவசாயத்தை வியாபாரமாக்கினாய்,  விளையாட்டுக்கு முட்டுக்கட்டை போட்டாய், தடை செய்யப்பட்ட அனைத்துப் பொருளையும் உள்ளே கொண்டு வந்து, நாட்டு வளத்தை அழிக்க இருக்கும் சூழ்ச்சி என்று எனக்கு புரியாமல் இல்லை, உன் துரோகத்தை எண்ணி என் திமிளோ திமிருகிறது..

கேலி ஏளனம் செய்வதை நிறுத்திவிட்டு
துணிவிருந்தால் என் முன்னே வந்து நில்,
நான் பதில் சொல்கிறேன்…

உன் சட்டம் என் குடும்பத்தை மட்டுமின்றி, உன் குடும்பம், நாளைய தலைமுறை வரை பாதிக்கப்படும் என தெரியாமல், பணத்திற்காகவும், பதவிக்காகவும் பல்லாயிரம் வருடத்திற்கு மேல் மரபு காத்து என் முன்னோர்கள் கொண்டு வந்த பாரம்பரியத்தை
விலை கொடுக்கிறாய் என்று நினைக்கும் போது மனம் கொதிக்கின்றது…

இவை அனைத்தும் புரிந்தும் பேச முடியாமல்..
வாடி வாசலில் வாடி நிற்கும்
உங்கள் நண்பன்!!!!!!!!!!!!

ஜல்லிக்கட்டு எங்கள் வாழ்வாதாரம்..!

- குமுதா N

#TNneedsJallikattu #WeSupportJallikattu #Tradition #OurPride #Jallikattu

No comments:

Post a Comment