செமஸ்டருக்கு பணமும் கட்டி
அரியரோட டிகிரி வாங்கி
அப்பன் ஆத்தா உயிரையும்
சேத்துவாங்கி பட்ட படிப்பு
படிச்சிப்புட்டு புள்ள வந்திருக்கு
நம்ம புள்ளவந்திருக்கு
படிச்சி பயன் என்ன மக்கா
நம்ம வயல் வேலைய பாரு
அயல்நாட்டுக்கு வேலைக்குபோக
பாஸ்போட்டு எடுத்துக்க பணமும்
வேனும் கொஞ்சம் இருந்தாபோதும்
பாஸ்போட்டு எடுத்துபுட்டு வௌிநாட்டுக்கு போயிபுட்டு ஒட்டகம்
மேய்த்து மாடு மேய்பதற்கு நம்ம
வயக்காட்டு வேலையில கவணவைச்சா
பொன்னுவிளையும் பூமி இது
மண்ணல்ல நம்ம சாமி
இதுக்கா படிச்சன் பட்டம்
விவசாயம் செய்தா வரும் நட்டம்
வௌிநாட்டுக்கு போனா பணம் கொட்டும்
அட பணம் கொட்டி என்பயனடா
பணத்தையா தின்ப பணத்தையா
நீ தின்ப என்ற கேள்வியோடு ஞாயிறு காலை வணக்கத்தை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன் சகோஸ்....!!!!!!
-அருண்பிரசாத் சீனீவாசன்
(சாமணியன்)
No comments:
Post a Comment