மஞ்சுவிரட்டு தடை நீங்க பாடுபடும் அனைத்து நல்உள்ளங்களுக்கும் நன்றி மட்டும் பாராட்டுக்கள்
பொங்கல் திருநாள் நெருங்கி கொண்டிருக்கும் இந்த தருணங்களில் மஞ்சுவிரட்டு நடத்துவதற்கான அனுமதியை இன்னும் தரவில்லை.வழக்கை கூட இன்னும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவில்லை.இது பற்றி தற்போது ஆட்சி செய்யும் அரசாங்கமும் கவலைப்படுவதாக தெரியவில்லை.ஒரு சில கட்சிகள் ஆதரவு தெரிவிப்பது போல் தங்கள் அரசியல் நாடகங்களை நடத்தி வருகின்றனர். நாடகம் என சொல்ல காரணம் தடை இந்த ஆண்டு வந்தது கிடையாது.ஒவ்வொரு ஆண்டும் கடைசி நேரத்தில் குரல் கொடுப்பது போல் குடுத்து கொண்டு பின்னர் தங்கள் வேலைகளை பார்க்க தொடங்கி விடுகின்றனர்.யாரும் கலையின் மீதுள்ள ஆர்வத்தில் செய்வதில்லை.அப்படி இருந்தால் என்றோ தடை உடைந்திருக்கம்.எத்தனையோ கோடி ஊழல் செய்தவர்களை எல்லாம் மீட்டு கொண்டு வரும்போது இந்த தடை பெரிய விசயமா என்ன??
எனக்குள் இருக்கும் சந்தேகம்.மஞ்சுவிரட்டு தடை என்பதே நம் மஞ்சுவிரட்டு அமைப்பிற்குள் உள்ள பிரிவினை வாதிகளின் செயலாக தான் இருக்கும் என்று.தங்களுக்குள் உள்ள பதிவி போட்டியை காரணம் காட்டி தமிழனின் கலையை அழிக்க துணை போயிருப்பார்கள் என்று தான் தோன்றுகிறது.பதவி ஆசை உள்ளவர்கள் அரசியல் போன்ற அமைப்புகளில் சேர்ந்து தங்கல் தேவைகளை நிறைவேற்றி கொள்ளலாம்.இத்தனை ஆண்டுகளாக நாம் வாழ்ந்து வந்த கலாச்சாரத்தை அழித்து நீங்கள் பெருமை தேடி கொள்ள வேண்டுமா??.தயவு செய்து சாமனிய மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளுங்கள்.நீங்கள் பணபலம் அனைத்திலும் நிறைவான வாழ்க்கையை பெற்றவர்கள்.ஆனால் ஏழை மக்களுக்கு மஞ்சு விரட்டு போன்ற உணர்வு ரீதியான சந்தோசங்கள் மட்டுமே சொந்தம்.உங்கள் போட்டியில் அதையும் அழித்து விடாதீர்கள்.
தமிழர்களே அரசியல் மற்றும் எந்த ஒரு அமைப்பிலும் தலைமையில் உள்ளவர்கள் தான் அறிவாளி நாம் அவர்களுக்கு கீழ் தான் வாழ வேண்டும் என்கிற எண்ணம் வேண்டாம்.நல்ல கருத்துகளை நீங்களும் சொல்லலாம்.மக்களுக்காக உழைப்பவர்கள் தான் பதவியில் இருப்பவர்கள் என்பதை அவர்களும் மறந்துவிட்டார்கள்,மக்களுக்கு மறந்து விட்டார்கள்.
(என்னுடைய தனிப்பட்ட கருத்தை பதிவு செய்துள்ளேன் தவறு இருப்பின் மன்னிக்கவும்.எந்த ஒரு அமைப்பையும் சார்ந்தவன் அல்ல தமிழன்.)
Tamilan Murugesh MG
No comments:
Post a Comment