Friday, 19 December 2014

மஞ்சுவிரட்டு நடக்கும் ஊர்களில் இளைஞர்கள் மற்றும் அமைப்பில் உள்ளவர்களின் செயல்பாடுகள்!!!

மஞ்சுவிரட்டு நடக்கும் ஊர்களில் இளைஞர்கள் மற்றும் அமைப்பில் உள்ளவர்களின் செயல்பாடுகள்!!!

1. முதல் விசயம் ஒற்றுமை வேண்டும்,மஞ்சுவிரட்டை சிறப்பாக நடத்த வேண்டும் என்கிற எண்ணம் வேண்டும்.

2. மஞ்சுவிரட்டில் உதவ நினைக்கும் பொதுவான அமைப்பு அனைத்து ஊரிலும் சுதந்திரமாக செயல்பட அங்கு உள்ள இளைஞர் அமைப்பு ஒத்துழைப்பு தர வேண்டும்.யார் பெரியவன் என்கிற பிரிவினை இருக்க கூடாது.

3.தேவையற்ற பிரச்சனைகளை தவீர்க்க முதன்மையாக மது என்பதை தவீர்க்க வேண்டும்.அதற்கு அதிகப்படியான முக்கியதுவத்தை குடுத்து தடை செய்ய வேண்டும்.

4. இளைஞர்கள் தங்களுக்குள் சிறு குழுக்களாக பிரிந்து போக்குவரத்தை சீர் செய்தல், காளைகளை முறையாக வரிசை படுத்தி வாடியில் அடைக்க உதவுதல்,வீரர்கள் காயம் அடைந்தால் உடனடியாக மருத்துவ உதவி கிடைக்க செய்தல் போன்றவற்றை செயல்படுத்தலாம்.

5. ஏதேனும் தவறுதலாக சிறு பிரச்சனை ஏற்படும் பட்சத்தில் அமைதியாக பேசி தீர்வுகாண வேண்டும் பொறுமை என்பது அவசியம்.

6. மஞ்சுவிரட்டு நடைபெறும் ஊர்களுக்கு முதல் நாள் சென்று ஆபத்தான பகுதிகளை(கிணறு,முள்வேலி) கண்டறிந்து காளைகள் விழுந்து விடாதபடி பாதுகாப்பு அரண் அமைக்க வேண்டும்.

7. வாடியில் இருந்து வெளியேறும் காளைகள் எந்தெந்த பாதையில் செல்லலாம் என்பதை தீர்மானித்து தகவல் மையம் ஒன்றை ஏற்படுத்தலாம்.உங்களை கடந்து செல்லும் காளைகளை புகைப்படம் எடுத்து கொள்ளும் பட்சத்தில் உரிமையாளர்கள் காளை தேடி வரும் போது காண்பித்து விரைவாக அவர்கள் காளையை சென்றடைய உதலாம்.

8. சிறுதொழிலாளர்கள் பாதிப்பு அடையாத வகையில் மக்கள் பசியாற உணவு மற்றும் குளிர்பானம் அளித்து உதவலாம்.

9. நமக்கு உதவுவதற்காக வருகை தரும் காவல்துறையினர்,மருத்துவர்கள் மற்றும் சமூக ஆர்வளர்களுக்கு அடிப்படை வசதி மற்றும் பாதுகாப்பை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.

10. அனைத்து ஊர் மக்களும் கலந்து கொண்டால் மட்டுமே நிகழ்ச்சி முழுமையடையும்.சொந்த வெறுப்புகளை காட்ட கூடாது.காளைகள் மற்றும் வீரர்கள் நிகழ்ச்சி முடிந்து பாதுகாப்பாக செல்ல உதவ வேண்டும்.

இந்த விசயங்களை இளைஞர்கள் சிறப்பாக செய்ய வேண்டும் எனில் முக்கிய பொருப்பில் உள்ள பெரியவர்கள் முழு சுதந்திரத்தை குடுப்பதுடன்,நல்ல படியாக நீங்கள் செய்வீர்கள் என்கிற நம்பிக்கையையும் அளிக்க வேண்டும்.

No comments:

Post a Comment