Wednesday, 17 December 2014

2015-முதல் இனி வரும் ஜல்லிக்கட்டு பற்றிய சிந்தனை!!!


2015-முதல் இனி வரும் ஜல்லிக்கட்டு பற்றிய  சிந்தனை!!!


1.இதுவரை ஜல்லிக்கட்டு நடந்த,நடத்த வேண்டும் என்கிற ஆர்வம் உள்ள ஊர்களுக்கும் ஜல்லிக்கட்டு ஆதரவாலர்கள் நேரில் சென்று அவர்களின் எண்ணங்களை தெரிந்து கொள்ள வேண்டும்.

2.எந்தந்த ஊர்களிள் ஜல்லிகட்டு நடத்தப்பட உள்ளது என்கிற இறுதி பட்டியலை தயார் செய்ய வேண்டும்.

3.தேர்வு செய்யப்பட்ட ஊர்களுக்கு ஓருவர் என்ற விகிதம் ஓன்றுபட்ட ஜல்லிக்கட்டு அமைப்பை உருவாக்க வேண்டும்.எல்லா ஊர் ஜல்லிக்கட்டு-ம் இந்த அமைப்பின் கீழ் நடத்தபட வேண்டும்.அந்தந்த ஊர்களிலும் திட்டத்தை செயல்படுத்த அமைப்பு இருப்பது அவசியம்.

4.தை மாதம் தொடங்கும் ஜல்லிக்கட்டு எத்தனை ஊர்கள் என்ற அடிப்படையில் மாதங்கள் முடிவு செய்யப்படும்.ஓவ்வொரு ஜல்லிக்கட்டு-க்கும் குறைந்தபட்சம் ஓருநாள் இடைவெளி இருக்க வேண்டும்.அது முதல் நாள் நிகழ்ச்சியில் ஏதேனும் தவறு நடந்திருப்பின் அதை திருத்தி கொள்ள உதவும்.

5.ஊர் பொதுமக்கள் தங்களுக்குள் உள்ள சொந்த வெறுப்புகளை ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் திணிக்க கூடாது.ஜல்லிக்கட்டு பொது அமைப்பிற்கு அனைத்து ஊர்களும் கட்டுபட வேண்டும்.மக்கள் கருத்துகளை தயக்கம் இல்லாமல் தெரிவிக்கவும் அதை ஏற்றுக்கொள்ளும் வகையிலும் பொது அமைப்பு இருக்க வேண்டும்.

6.எந்த ஊர்கள் என்று ஜல்லிக்கட்டு நடத்தலாம் என்கிற தேதியை தலைமை பாரபட்சம் இல்லாமல் முடிவு செய்து ஓரு மாதம் முன்பாக அந்தந்த ஊர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

7.ஜல்லிக்கட்டு பொது அமைப்பில் உள்ளவர்கள் முதல் நாளில் சென்று நிலவரம் அறிந்து நிகழ்ச்சி நடத்த அனுமதி அளிக்க வேண்டும்.

8.ஜல்லிக்கட்டு நடக்கும் ஊரில் இரண்டு நாட்களுக்கு முன்பாகவே மது விற்பனை தடை செய்யபட வேண்டும்.அதை மீறி மது விற்றால் அதற்கான பொருப்பை ஊர் பொதுமக்களும்,உள்ளுர் அமைப்பும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.அதன் விளைவாக ஏதேனும் பிரச்சனை வருமானால் தயவு தாய்ச்சியம் பார்க்காமல் அடுத்த ஆண்டுகளில் ஜல்லிக்கட்டு நடத்த தடை விதிக்க வேண்டும்.மறுபரிசீலனை இல்லாமல்.இது தவறுகளை குறைக்க உதவும்.

9.ஜல்லிக்கட்டு நடைபெறும் ஊர்கள் போக்குவரத்து மற்றும் பொதுபணிதுறை-க்கு தெரிவித்து போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் மாற்று பாதையை தேர்வு செய்ய வேண்டும்.காளைகள் மற்றும் பார்வையாளர்கள் வரும் வாகனத்திற்கு போதுமான இடவசதியை ஏற்படுத்தி தரவேண்டும்.ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியின் காரணமாக யாருக்கும் இயல்பு வாழ்க்கை பாதிக்க கூடாது.

10.ஜல்லிக்கட்டு நடக்கும் ஊர்களில் பொருப்பில் உள்ளவர்கள் பெயர் மற்றும் தொடர்பு எண்கள் தொலைக்காட்சி,பத்திரிகை மற்றும் அமைப்பில் உள்ளவர்கள் மூலமாக
பொதுமக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

11.ஜல்லிக்கட்டு காளை வைத்திருப்பவர்கள் தொலைபேசி மூலமாக தங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.9 மணிக்கு தொடங்கி 5 மணி வரை எத்தனை காளைகள் பங்கேற்க முடியும் என்பதை தீர்மானித்து அதற்கு மேல் பதிபவர்களுக்கு தெரியபடுத்த வேண்டும்.அதன் மூலமாக காளைகளை கொண்டு வந்து ஏமாற்றத்துடன் திரும்புவது குறையும்.காளைகள் நீண்ட நேரம் நிர்க்க வேண்டியதில்லை.ஓய்வு எடுத்துக்கொண்டு பெயர் அறிவித்த உடன் காளைகளை வரிசையில் நிறுத்தினால் போதுமானது.முறையை மீறி காளையை வரிசை படுத்தினால் அந்த காளை புகைப்படம் எடுக்கப்பட்டு எந்த வருடமும் ஜல்லிகட்டில் கலந்து கொள்ள தடை விதிக்க வேண்டும்.

12.மருத்துவ பரிசோதனை நிகழ்ச்சி தொடங்க ஒரு மணிநேரம் இருக்க தொடங்க வேண்டும்.அதனால் தேவையற்ற நெருக்கடி குறையும்.

13.மாடி பிடி வீரர்களின் அளவும் நிர்ணயக்கபட்டு முன் பதிவின் மூலமாகவே களமிறக்க வேண்டும்.மருத்துவ பரிசோதனையில் தேர்வு பெற வேண்டும்.தவறான செய்கையில் ஈடுபடும் வீரர்கள் புகைப்படம் எடுக்கப்பட்டு ஜல்லிக்கட்டு பங்கேற்க தடைசெய்யப்பட வேண்டும்.வீரர்கள் காயப்பட நேர்ந்தால் தொடந்து விளையாட அனுமதி அளிக்க கூடாது.

14.ஜல்லிக்கட்டு நடக்கும் ஊரில் பொருப்பில் உள்ளவர்கள்,பங்கேற்கும் காளைகள்,காளையர்கள்.நிகழ்ச்சி பற்றிய முழு விபரத்தை எழுத்தின் வாயிலாக சம்மந்தபட்ட காவல்துறை,தீயனைப்பு நிலையம் மற்றும் மாவட்ட ஆட்சியகம் ஆகியவற்றிற்கு தெரிவிக்க வேண்டும்.

15.காளை அடக்குகின்ற நிகழ்ச்சியாக மட்டும் இல்லாமல் விருந்தோம்பல் மற்றும் கலைநிகழ்ச்சிகளை நடத்த வேண்டும்.அதனால் ஊரின் அழகும்,மக்கள் இளப்பரவும் உதவும்

16.வெற்றி பெறும் காளை மற்றும் காளையர்களுக்கு தகுந்த பாராட்டும்,பரிசுகளும் வழங்க வேண்டும்.

17.தரக்குறைவான வார்த்தைகளில் காளையின் உரிமையாளர்கள் மற்றும் காளையர்களை பேச கூடாது.அதனால் தேவையற்ற பிரச்சனை தவிர்க்கப்படும்.தவறு இருப்பின் நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும்.

18.நிகழ்ச்சி தொடங்க மற்றும் முடிவதற்கு 30 நிமிடம் முன்பாக ஓளிபெருக்கியில் தெரியப்படுத்த வேண்டும்.அதனால் அமைப்பாளர்கள் விரைவாக செயல்பட உதவும்.

19.வீரர்கள் மற்றும் காளையின் உரிமையாளர்கள் திறமையின் அடிப்படையில் வெற்றி தேல்வியை சமமாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.பகையை வளர்த்துக் கொள்ள கூடாது.

20.நிகழ்ச்சி நடந்த அன்று அல்லது நேரம் கிடைக்கும் சமயத்தில் மக்களிடம் நிகழ்ச்சி பற்றிய குறை,நிறைகளை பேச வேண்டும்.

21.நிகழ்ச்சி பற்றி முழு விபரத்தை நடந்து முடிந்த ஓருசில நாட்களுக்குள் காவல்துறை,மாவட்ட ஆட்சியகம் ஆகியவற்றிற்கு தெரிவிக்க வேண்டும்.

22.அந்த வருடம் சிறந்த முறையில் பாதுகாப்பு மற்றும் பிரச்சனை இல்லாமல் நடத்திய ஊர்களை அடையாளம் கண்டு பாராட்டுகள் வழங்கி தொலைக்காட்சி மற்றும் பத்திரிகையில் வெளியிட வேண்டும்.இது காளை மற்றும் காளையர்களுக்கும் பொருந்தும்

-நன்றி 


(குறிப்பு:என்னுடைய சிந்தனையை வெளிப்படுத்தி உள்ளேன் நல்ல கருத்து இருப்பின் ஏற்றுக்கொள்ளுங்கள் குறை இருப்பின் என்னிடம் தெரியப்படுத்துங்கள்).

No comments:

Post a Comment