Tuesday, 16 December 2014

ஜல்லிக்கட்டு காலத்தால் அழிக்க முடியாத பொக்கிஷம்!!


*** தமிழர்களின் வாழ்க்கை முறை மிக நேர்த்தியாக உருவாக்கப்பட்டது.இயற்கை சூழல் மற்றும் கலாச்சாரம்,பாரம்பரியம் எதையும் பிரித்து பார்க்க முடியாத ஒன்று. அன்று முதல் இன்று வரை தனக்கென ஒரு கட்டுப்பாட்டை வைத்து வாழ்வதால் தான் தமிழர்களின் புகழ் உலகெங்கும் பரவியுள்ளது. தமிழர்கள் கடை பிடிக்கும் விளையாட்டான மஞ்சுவிரட்டு வெறும் பொழுது போக்கு அல்ல தேவையான நேரத்தில் பயன்படுத்திவிட்டு விலகி செல்ல.மஞ்சுவிரட்டு உருவான விதம் ஆரம்பம் முதல் ஆராய வேண்டும் எனில் 4000 ஆண்டுகள் பின்னோக்கி செல்ல வேண்டும்.சங்க இலக்கியங்கள் தொடங்கி இன்றைய நவீன காலங்கள் வரை ஒரு கலையை வளர்ப்பது என்பது எளிதான செயல் அல்ல.காலத்தின் மாற்றத்தால் எத்தனையோ சுவடுகள் அழிந்து போயிருக்கின்றன.ஆனால் இத்தனை ஆண்டுகலாக தமிழனும்,கலாச்சாரமும் மாறாமல் இருக்க காரணம் ஒற்றுமையும்,பாரம்பரியத்தின் மீது வைத்திருக்கின்ற மரியாதையும் தான்.பழமையான விசயங்களை பாதுகாக்க தனி அமைப்பை உருவாக்கி நம் வீரத்தின் அடையாள சின்னமான மஞ்சுவிரட்டை தொடந்து நடத்த வேண்டும்.என்றுமே இயற்கைக்கு மாறாக நாம் செய்யும் செயல்கள் பெரிய ஆபத்தை உருவாக்கும்.காளை அடக்கும் நிகழ்ச்சியான மஞ்சுவிரட்டை பல விதங்களில் நடத்தி பெருமை தேடி தந்தவன் தமிழன்.விவசாயத்தின் தேவைக்காக பயன்படுத்தப்பட்ட காளைகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக மாட்டுப்பொங்கல் என்பதை ஏற்படுத்தி மனிதர்களுக்கு இணையாக மரியாதை அளித்த இனம் தமிழ் இனம் மட்டுமே.தமிழின் மீதும் அதன் ஈடுபாடு கொண்டிருக்கும் மக்கள் இருக்கும் வரை இன்னும் ஆயிரம் ஆண்டுகள் மஞ்சுவிரட்டு நடைபெறும்.இந்த உலகில் நிலையான அங்கிகாரத்தை பெற்ற ஒரு தேசத்தின் உணர்வுகள் ஒருபோதும் சிதைக்கப்பட மாட்டாது.தமிழ் இனத்தின் பெருமையை பறை சாட்டும் தமிழர் திருநாளான பொங்கள் திருநாளின் வருகைக்காக வீரனும்,வீர தமிழகமும்.....

No comments:

Post a Comment