சல்லிகட்டு ரேக்ளா நடத்த சட்டம் வேண்டும் என்று இன்றளவில் அதிக போராட்டமும் ஆர்பாட்டமும் நடப்பது மனதிற்கு மிகுந்த நம்பிக்கையாக இருக்கிறது ஆனால் எந்த சட்டம் இயற்ற வேண்டும் என்பதில் அறியாமையில் இருக்கிறோம்.
நமது இந்த அறியாமையை வைத்துதான் 2016 ல் மத்திய அரசு சல்லிகட்டுக்கு சட்டம் இயற்றுவதைபோல் ஏமாற்றி ஒன்றுக்கும் உதவாத அறிக்கை மட்டுமே விட்டது.
சரி எந்த எந்த முறையில் சட்டமியற்ற வேண்டும்??
விலங்குவதை தடை சட்டம் 1960 ல்
பிரிவு 11(n) ல் சல்லிகட்டு, என்பது விலங்கு சண்டையாகாது என்பதை உறுதியளிக்க வேண்டும்.
பிரிவு 11 (3) ல் பாரம்பரியமாக நடத்தப்படும் சல்லிகட்டு, ரேக்ளா போன்ற விளையாட்டுகள் விலங்குவதையாகாது என சட்டம் இயற்றவேண்டும்.
பிரிவு 27 ல் காட்சிபடுத்தகூடாத விலங்குகளை ராணுவத்திலோ அல்லது போலீஸிலோ உபயோகபடுத்தினால் தவறில்லை என்பது போல் சல்லிகட்டிற்கும் ரேக்ளாவிற்கும் மாடுகளை பயன்படுத்த விதிவிலக்கு உண்டு என சட்டம் கொண்டுவர வேண்டும்.
பிரிவு 28 ல் மதவழிபாட்டிற்காக நடத்தப்படும் சல்லிகட்டு மற்றும் ரேக்ளாவிற்காக மாடுகளை பயன்படுத்தலாம் என சட்டம் கொண்டு வரவேண்டும் .
நாட்டு மாடு இனங்களை காப்பாற்ற சல்லிகட்டு, ரேக்ளா போன்ற பாரம்பரிய விளையாட்டுகள் அவசியம் நடத்தப்பட வேண்டும் என்ற சட்டம் இயற்ற வேண்டும்.
எங்கு போராட்டம் நடைபெற்றாலும் இதை எடுத்துரைத்து அடுத்தவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்.
No comments:
Post a Comment