*** மஞ்சுவிரட்டு தடை நீங்க பாடுபடும் அனைத்து நல்உள்ளங்களுக்கும் நன்றி மற்றும் பாராட்டுக்கள்***
தமிழ்நாட்டில் தமிழர்கள் தங்கள் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்துடன் இணைந்த நல்வாழ்க்கை வாழ்வதற்கு எனக்கு தெரிந்த கடைசி வழிமுறை:-
தேர்தல் மற்றும் ஓட்டுரிமையை சரியாக பயன்படுத்துவது மட்டுமே இதற்கான நிரந்தர தீர்வாக இருக்கும்.அரசியல் கட்சிகளை சார்ந்த ஆட்சி முறையில் இருந்து தங்கள் சிந்தனையை மாற்ற வேண்டும்.அரசியல் கட்சிகள் மட்டும் தான் நாட்டை ஆட்சி செய்ய வேண்டும் என்கிற எண்ணம் மறைய வேண்டும்.ஒரு கட்சியின் தலைவர் இவர் தான் வேட்பாளர் என்று அறிவிக்கிறார்.யார் என்றே தெரியாத ஒருவரை எப்படி வெற்றி செய்கிறீர்கள் என்பது இதுவரை புரியாத புதிராகவே உள்ளது.இப்போது அரசியலில் இருப்பவர்களின் பின்னனியை விசாரித்து பாருங்கள் 90% சமூக விரோத செயல்களில் ஈடுபட்டவர்களாக தான் உள்ளனர்.என்ன ஒரு வித்தியாசம் என்றால் அரசியலுக்கு வருவதற்கு முன்பு,பின்பு என்று மட்டுமே பிரிக்க முடியும் மற்றபடி நல்லவர்கள் என்று யாரும் இல்லை.பணம் பலம் உள்ளவர்கள் தான் பதவிக்கு வரவேண்டும் அப்போது தான் மக்களுக்கு நலத்திட்டங்களை செய்வார்கள் என்கிற தவறான எண்ணம் உள்ளது.எந்த அரசியல்வாதிகளும் தங்கள் சொந்த பணத்தில் மக்களுக்கு உதவிகள் செய்வதில்லை அரசாங்கம் ஒவ்வொரு நலத்திட்டங்களுக்கும் ஒரு தொகையை ஒதுக்கி உள்ளது எனவே சாதாரண மக்களும் பதவி வகிக்கலாம்.
நம் மக்களோடு மக்களாக வாழும் ஒரு நபரை உங்கள் தொகுதிக்கு வேட்பாளராக நிறுத்தி ஒருமனதாக வெற்றி பெற செய்யுங்கள்.இத்தனை ஆண்டுகால வாழ்க்கையில் ஒரு நல்ல மனிதரை கூடவா கண்டறியவில்லை.கட்சி சார்ந்த அமைப்பினர் முதலமைச்சராக இருந்தால் சுயச்சையாக வெற்றி பெற்றவர் ஏதேனும் கோரிக்கை வைத்தால் அதை நிறைவேற்றி தரமாட்டார்கள் என்று ஒன்றும் இல்லை.உங்களுக்கு ஆதரவாக அவர் நிற்கும் போது நீங்கள் அவருக்கு ஆதரவாக நில்லுங்கள் அனைத்து மக்களும் முன் நிற்கும் போது எந்த கோரிக்கையாக இருந்தாலும் நிறைவேற்றி தான் ஆக வேண்டும்.இதே போல் அனைத்து தொகுதிகளிலும் மக்கள் தங்களுக்கு நன்மை செய்யும் ஒருவரை நிறுத்தி வெற்றி பெற செய்தால் கூட பெரும்பான்மையின் அடிப்படையில் ஆட்சி அமைக்கவும் முடியும்.நம்மோடு வாழும் ஒருவருக்கு தான் நமது தேவைகள் அனைத்தும் தெரியும்.யாரோ ஒருவர் எழுதி குடுத்ததை வாசித்துவிட்டு வெற்றி பெறுபவர்களால் நமக்கு எந்த நன்மையும் கிடையாது.இனிமேலாவது அரசியல் கட்சிகளை நம்பி ஏமாறாதீர்கள் மக்களே!! மஞ்சுவிரட்டிற்கு மத்தியில் ஆளும் BJP கட்சி அனுமதி அளிக்கவில்லை,தமிழகத்தை ஆட்சி செய்யும் அ.தி.மு.க வும் வாங்கி தர தவறிவிட்டது என நினைத்து தி.மு.க வை வெற்றி பெற வைப்போம் என்று சிந்திக்காதீர்கள்.போன தேர்தலில் படுதோல்வி அடைய வைத்ததர்காக பழிவாங்க காத்து கொண்டிருப்பார்கள்.எனவே நாம் நலமோடு வாழ வேண்டும் எனில் அரசியல் கட்சிகளை விட்டுவிட்டு நமக்காக உழைக்கும் உண்மையான ஒருவரை ஆட்சி அமைக்க செய்வதே நிரந்தர தீர்வாக இருக்கும்.

No comments:
Post a Comment