இயந்திரமயமாகி போன இந்த உலகத்தில் என்னை பற்றி கவலைப்படவோ,நினைக்கவோ நேரம் இல்லை இதில் நாட்டை பற்றியோ,அதன் கலாச்சார அழிவை பற்றி யோசிக்க எங்கு நேரம் இருக்கிறது.இது இப்போ அதிகப்படியான மக்கள் பயன்படுத்தும் வார்த்தை.ஆனால் அந்த இயந்திர வாழ்க்கைக்குள் தங்களை நுழைத்தது எது என்று யாரும் யோசிக்கவில்லை.தங்கள் மேற்கொள்ளும் வாழ்க்கை முறையில் மாற்றம் கொண்டு வரலாம் ஆனால் வாழ்க்கை முறையையே மாற்ற நினைப்பது முற்றிலுமே தவறான ஒன்று அது நம்மை அழிவு பாதைக்கு தான் கொண்டு போகும்.இன்று நம் தமிழகம் இருக்கும் நிலையை கவனித்தாலே உண்மை புரியும்.இயற்கையோடு கலந்த அழகான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்த போது இந்த அளவிற்கு சமுதாய சீர்கேடுகள் இருந்ததில்லை.நவீன சிந்தனைக்கு தங்களை மாற்றிக் கொள்வதில் ஒன்றும் தவறில்லை.அதே சமயம் தன்னுடைய அடிப்படை தேவைகளுக்கு கூட மாற்று பொருளை பெற நினைப்பது தவறு அதன் விளைவு தான் இன்று ஆரோக்கியமின்மை மற்றும் குறைந்த வயதில் மரணம்.
இன்னைக்கு ரொம்ப முக்கியமா கவனிக்கப்பட வேண்டிய விசயமா நினைக்குறது விவசாயமும்,நாட்டு மாடுகளையும் தான்.இந்த இரண்டுமே ஒன்றோடு ஒன்று இணைந்தவைகளா இருந்தன.எப்போ டிராக்டர் விவசாய பூமிக்குள்ள வந்துச்சோ அப்பவே காளைகளோட பயன்பாடும் குறைஞ்சு போச்சு,மக்களின் ஆயுளும் குறைஞ்சு போச்சு.உழுவதில் தொடங்கி நெல் விற்பனைக்கு கொண்டு போறது வரைக்கும் காளைகளோட உதவி இருந்துச்சு.உழும் போது காளைகள் போடுற சாணம் மற்றும் சிறுநீர் ஆகியவை மண்ணில் கலந்து நல்ல விளைச்சலை தந்தன.அதிக நேரம் உழைத்ததால் உடலும் ஆரோக்கியமாக இருந்தது.இன்று இயந்திரங்களை பயன்படுத்தியதால் நிலத்தின் குறைந்து விளைச்சலும் இல்லாமல் போய்விட்டது.இவர்களே செயற்கை முறையை பயன்படுத்தி நிலத்தை மலடாக்கிவிட்டு பின் விளைச்சல் இல்லை என்றும்,காளைகள் பயன்படுத்தாமலே தேவை இல்லை என்றும் ஒதுக்கி விட்டார்கள்.இயந்திரம்,செயற்கை உரம் என்று விவசாயத்தில் நஞ்சு கலந்துவிட்டார்கள்.அடுத்தது பால் உற்பத்தியும் இல்லாமல் போய்விட்டது.காரணம் விவசாயம் சரியாக இருந்தால் தானே வைக்கோல் மற்றும் புல் கிடைக்கும் மற்ற தீவணங்கள் வாங்க வருமானமும் கிடைக்கும்.சரியான ஊட்டச்சத்து கிடைக்காத பசுக்கள் எப்படி அதிகப்படியான பாலை தரும்.உடனே மாற்று வழியை யோசித்ததன் விளைவு போலியான பால் பவுடர்கள்,பசுக்களின் பயன்பாடுகள் குறைந்தது.இப்படி இயற்கையோடு,ஆரோக்கியமான வாழ்க்கை முறையை நாமலே மாற்றி கொண்டு பிறரின் மீது பழியைப் போடுவது நியாயம் அற்றது.
மீண்டும் இயற்கை விவசாயத்தை மேற்க்கொள்வது தான் இதற்கான தீர்வாக இருக்கும்.இயந்திரங்கள் மற்றும் செயற்க்கையான விசயங்கள் அனைத்தையும் முற்றிலுமாக தவீர்க்க வேண்டும்.காளைகளின் பயன்பாடுகளை அதிகப்படுத்த வேண்டும் அப்போது தான் நாமும் ஆரோக்கியமாக வாழமுடியும்.நாட்டு மாடுகளின் அழிவையும் தடுக்க முடியும்.
No comments:
Post a Comment