Friday, 30 December 2016

ஜல்லிக்கட்டு கவிதை 1

சீறிப்பாயும் காளையை நோக்கி
சிரித்து கொஞ்சம் மீசைமுறுக்கி
சிறுத்தைபோல் அதை துரத்திப் பிடித்து
அடக்கி ஆள்வான் வீரத்தமிழன்!

வேட்டியை கொஞ்சம் மடித்துக் கட்டி,
வேங்கைகள் மட்டும் விளையாடும் போட்டி!
தலைப்பாகை கொஞ்சம் இறுக்கிக் கட்டி
தமிழன் ஆடும் பழம்பெரும் போட்டி!

குருதிகள் எங்கள் மாலைகளாகும்!
காயங்கள் வீரத் தழும்புகளாகும்!
இரட்டைக் கொம்பும் கைப்பிடியாகும்!
மிரளும் காளை கன்றுகளாகும்!

பார்ப்போர் தமக்கு மெய்விட் டுயிரோட,
பாயும் காளைக்கு உயிர்விட்டு மெய்யோடும்! - அப்
பாரினில் தமிழன் உயிர்மெய்யாய் மாறிவிட! - அப்
போரினில் ஆயுதம் எமதிரு கரங்கள் ஆகும்!

திமிலு பிடிக்கும் தமிழர் நாங்கள்,
திமிரு பிடித்தத் தமிழன் டா!
உறுமி அடித்து ஊரைக் கூட்டி,
உலகம் வியக்கும் வீரன் டா!

தைத்திரு நாளில் காளை அடக்கும்,
ஜல்லிக்கட்டு வீரர் டா!
விளையாட்டல்ல உரிமை இது - எங்கள்
வீரத்தின் அடையாளம் டா!

#TNneedsJALLIKATTU
#VoiceforJallikattu
#SaveJallikattu

- ஜினவரன் சுபாரதி

No comments:

Post a Comment