தை பொங்கலுக்கு ஜல்லிகட்டு நடைபெற வேண்டி அலங்காநல்லூரில் கிராம மக்கள் கோவிலில் வழிபாடு நடத்தினர்.
ஜல்லிகட்டு
தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்றானது ஜல்லிகட்டு விழா. இது பாரம்பரியம் நிறைந்த கலாச்சார விழாக்களில் இன்றளவும் நிலைத்து உலகளவில் புகழ்பெற்று விளங்கி வருகிறது. இந்த விழாவானது ஆண்டு தோறும் தைப்பொங்கல் தமிழர் திருநாளையொட்டி நடைபெற்று வருகிறது. இதில் மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜனவரி 15–ந்தேதியும், பாலமேட்டில் 16–ந் தேதியும், உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூரில் 17–ந்தேதியும், ஜல்லிகட்டு விழா வழக்கம் போல் நீதி மன்ற வழிகாட்டுதலின் படி தமிழ்நாடு அரசின் மேற்பார்வையில் விலங்குகள் நலவாரிய கண்காணிப்பில் நடைபெறும் என தென்மாவட்ட மக்களும், காளைகள் வளர்ப்பவர்களும், மாடுபிடி வீரர்களும் அதி தீவிர எதிர்பார்ப்பில் உள்ளனர்.
கடந்த 7 ஆண்டுகளாக பல்வேறு தடைகளை தாண்டி நீதி மன்ற இடைக்கால உத்தரவுபடி நடைபெற்று வந்துள்ளது. அதன்படி நடைபெற உள்ள ஜல்லிகட்டுவிழா வழக்கம் போல் இந்த வருடமும் நடைபெறுவதற்கு அந்தந்த விழா கமிட்டியினர் முழு நம்பிக்கையில் மத்திய, மாநில அரசுகளை அணுகியுள்ளனர். மேலும் காளைகள் வளர்ப்பவர்கள் நடைபயிற்சி, நீச்சல், ஓட்டம், மண்ணை குத்தும் பயிற்சிகள் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளை காளைகளுக்கு அளித்து வருகின்றனர்.
வழிபாடு
இது தவிர மாடுகளுக்கு சிறப்பு தீவனங்களாக நாட்டு பருத்தி விதை, நிலக்கடலை புண்ணாக்கு, முதிர்ந்த தேங்காய்கள், கோழி முட்டைகள் உள்பட பல தீவனங்கள் வழங்கப்பட்டு வருகிறது. காஞ்சரம்பேட்டை அருகே பெரியபட்டியில் மந்தையம்மன் கோவில் முன்பாக கிராம மக்களும், மாடு வளர்ப்பவர்களும், வழக்கம் போல் தை மாதம் நடைபெறும் ஜல்லிகட்டு விழா நடைபெற வேண்டி அந்த கோவில்மாட்டுடன் சாமிகும்பிட்டு வழிபாடு செய்தனர்.
No comments:
Post a Comment